• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கு.. முன்னணி சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரிக்க இடைக்கால தடை..

ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கு.. முன்னணி சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரிக்க இடைக்கால தடை..

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் முன்னணி சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஞானவேல் ராஜா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதி நிஷாபானு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர். இவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு வட்டியும் முதலீட்டையும் திருப்பித் தராமல் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரின் புகாரின்பேரில் இருவரையும் பஜார் போலீஸார் கடந்த ஜூன் 10ம் தேதி கைது செய்தனர்.

Also read: ஆஸ்கரில் போட்டியிட இந்தியா சார்பாக தேர்வான ‘ஜல்லிக்கட்டு’ - செல்வராகவன் கணிப்பு

நீதிமணி, ஆசிரியர் ஆனந்த் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ரூ.145 கோடி நிதி திரட்டியதாகவும், இதில் முதலீட்டாளர்களுக்கு ரூ.95 கோடி செலுத்திவிட்டதாகவும், ரூ.50 கோடி பாக்கியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்களான சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, முருகானந்தம் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரணைக்கு ஆக. 20 முதல் 23ம் தேதிக்குள் ஆஜராகுமாறு ராமநாதபுரம் பஜார் போலீஸார் சம்மன் அனுப்பினர். தனது 'மகாமுனி' படத்தின் விநியோகஸ்தக உரிமைக்காக நீதிமணி பணம் கொடுத்ததாகவும், தனக்கும் மோசடிக்கும் தொடர்பு இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. நான் ஆஜரானேன். இந்த நிலையில்  ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும், பல கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில் பஜார் காவல் நிலையத்தில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



இந்த வழக்கிற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. தவறான தகவலால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்றுள்ளேன். எனவே இந்த வழக்கில் என்னை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி நிஷாபானு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 300 கோடி நிதி மோசடி  வழக்கு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: