Home /News /entertainment /

‘அண்ணாமலை’ வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு… ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

‘அண்ணாமலை’ வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு… ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

அண்ணாமலை படத்தின் போஸ்டர்

அண்ணாமலை படத்தின் போஸ்டர்

30 Years of Annamalai : படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஜினியை படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    ரஜினியின் மெகாஹிட் திரைப்படமான அண்ணாமலை வெளியாகி 30 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    #30YearsofAnnamalai என்ற ஹேஷ் டேக்கின் கீழ் பதிவுகளும், வாழ்த்துக்களும் அண்ணாமலை படத்திற்கு குவிந்து வருகிறது.

    ஜூன் 27-ம்தேதியான இதே நாளில் 1992-ம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் ரஜினி, குஷ்பு, மனோரமா, ஆனந்த் பாபு, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி,  உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    கவிதாலயா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.



    சிறுவயதில் இருந்தே ஏழை பால் வியாபாரியான ரஜினியும் (அண்ணாமலை) மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி ஆனந்த்பாபுவும் (அசோக்) நண்பர்களாக இருப்பார்கள். இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த அசோக்கின் தந்தை ராதாரவி முயல்வார்.



    இதனை எதிர்க்கும், நட்பு, அதனை வெல்லும் சதி, துரோகம், பழிவாங்கல் என ஒட்டுமொத்த படமே ஜனரஞ்சகமாக அமைக்கப்பட்டிருக்கும்.



    ரஜினியின் மெகா மாஸ் படங்களில் ஒன்றாக நாம் அண்ணாமலையை குறிப்பிடலாம். படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஜினியை படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



    அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற பாடல்கள், டயலாக்குகளை அதிக எண்ணிக்கையில் ரஜினி ரசிகர்கள், சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி