Surekha Sikri: 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை மாரடைப்பால் மரணம்

சுரேகா சிக்ரி

தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சுரேகா சிக்ரி, அதற்காக 3 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

  • Share this:
    மூன்று முறை தேசிய விருது வென்ற நடிகை சுரேகா சுக்ரி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    கடந்த 1978-ம் ஆண்டு வெளியான அரசியல் படமான ’கிசா குர்சி கா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. பாலிகா வது, பதாய் ஹோ, தமாஸ், மம்மோ உள்ளிட்ட ஏகப்பட்ட படைப்புகளில் துணை நடிகையாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    1988-ம் ஆண்டு வெளியான தமாஸ், 1994-ம் ஆண்டு வெளியான மம்மோ மற்றும் 2019-ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ ஆகிய மூன்று படங்களில் துணை நடிகையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சுரேகா சிக்ரி, அதற்காக 3 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலிவுட் பிரபலங்கள், சுரேகா சிக்ரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: