ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் மரணம்.! சூப்பர் ஸ்டாரை வார்த்தைகளால் தேற்றும் ரசிகர்கள்!

நடிகர் மகேஷ் பாபு குடும்பத்தில் ஒரே ஆண்டில் 3 பேர் மரணம்.! சூப்பர் ஸ்டாரை வார்த்தைகளால் தேற்றும் ரசிகர்கள்!

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

இன்று அதிகாலை 1.15 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் நிலைமை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு குடும்பத்தில் 2022 இல் மட்டும் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகள் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒக்கடு, தூக்குடு, நேனோக்கடைன், பிசினஸ் மேன், போக்கிரி படங்கள் மூலம் திரை உலகிற்க்கு தன பெயரை நிலை நாட்டிக்கொண்டு பெரும் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபுவின் தந்தை , தாய், சகோதரர் என்று 2022 இல் மட்டும் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அண்ணன் ரமேஷ் பாபு:

2022 ஜனவரி மாதம் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும், மூத்த நடிகர் ஜி. கிருஷ்ணாவின் மகனுமான நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு 56 வயதில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே  ஜனவரி 8ம் தேதி  இறந்தார். தன் தந்தையோடு குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் பச்சை தோரணம், சாம்ராட், முக்குரு கொடுக்குலு, சின்னி கிருஷ்ணுடு, பஜார் ரவுடி, கரும்புலி, கலியுக அபிமாண்டியுடு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தாய் இந்திரா தேவி :

அதை அடுத்து நடிகரின் தாயார் இந்திரா தேவி வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரும் உடல் நலக்குறைவு காரணமாக 28/09/2022 மரணம் அடைந்தார். ஜூனியர் என்டிஆர், விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

தந்தை கிருஷ்ண மூர்த்தி:

இந்நிலையில் 350 படங்களில் நடித்து தன் காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த மகேஷ் பாபுவின் தந்தை கட்டமனேனி சிவ ராம கிருஷ்ண மூர்த்தி, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் காலமானார்.

80 வயதான திரு கிருஷ்ணா, இன்று அதிகாலை 1.15 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் நிலைமை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் காலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தள்ளார்.

1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார், ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார். சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Death, Mahesh babu