ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2K கிட்ஸ் கொண்டாடும் லவ் டுடே திரைப்படம் : வசூல் எவ்வளவு தெரியுமா?

2K கிட்ஸ் கொண்டாடும் லவ் டுடே திரைப்படம் : வசூல் எவ்வளவு தெரியுமா?

லவ் டுடே திரைப்படம்

லவ் டுடே திரைப்படம்

லவ் டுடே படம் தமிழகத்தில் 42.50 கோடி ரூபாய் செய்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லவ் டுடே திரைப்படம் 42 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே.  இந்த படம் கடந்த நான்காம் தேதி வெளியானது.

2K கிட்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதன் காரணமாக முதல் நாளிலிருந்து லவ் டுடே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.  இதற்கு பலனாக தற்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடியே 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த திரைப்படம் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் அதிகப்படியான வசூலை ஈட்டி வருகிறது.  42 கோடியே 50 லட்சம் ரூபாய் மொத்த வசூலை இதுவரை ஈட்டி உள்ள நிலையில், அதில் 20 கோடி ரூபாய் ஷேர் தொகையாக தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் கடந்த 2019-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முன்பு வந்த படங்களை போல் இல்லாமல், புதிய கதைக் களத்தில் கோமாளி படம் ரசிகர்களை கவர்ந்தது.

விதவிதமான ப்ளூ அவுட் ஃபிட்டில் நடிகை டாப்ஸி.. அழகிய படங்கள்..!

பிரதீப் இயக்கி நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான லவ் டுடே திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. காதலை மையமாக கொண்டு காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்தி அடையச் செய்தது. 

திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

ட்ரைலரை பார்க்க:

' isDesktop="true" id="837582" youtubeid="FaQe8JFGdaM" category="cinema">

இந்த படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த வெள்ளியன்று வெளியான சுந்தர் சி. யின் காபி வித் காதல் உள்ளிட்ட படங்களை ஓரங்கட்டி விட்டு லவ் டுடே வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema