நடிகர் தளபதி விஜய் நாயகனாக திரை உலகில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை நெல்லை விஜய் மக்கள் மன்றத்தினர் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் திரையுலகின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் உள்ளார். இவர் தனது 10-வது வயதில் 1984-ம் ஆண்டு வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1988-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தை இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 1992-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அவரை அறிமுகபடுத்தினார். ஆரம்ப கட்டத்தில் அடிதடி படங்களில் மட்டுமே கதாநாயகனான நடித்த விஜய் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. 90-களின் இறுதியில் வெளிவந்த விக்கிரமனின் பூவே உனக்காக இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை அதனை தொடர்ந்து லவ் டுடே என அடுத்தடுத்த படங்கள் தொடர் வெற்றி படங்களாக அமைந்தது.
அதுவே விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இதன் காரணமாக இளம் ரசிகர்களின் கவனம் நடிகர் விஜய் பக்கம் திரும்பியது. கதாநாயகனாக மட்டுமல்ல 1994 முதல் பின்னணி பாடகராகவும் விஜய் அவதாரம் எடுத்த இப்போது வரை 30-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் ரசிகர்களும் அதிகம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் ரசிக்கும் கதாநாயகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்க்கு தனி இடம் உண்டு. அதோடு அவரது திரைப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் திரையிடப்படும் திரையுலகில் கதாநாயகனாக பல லட்சம் ரசிகர்களுடன் வலம் வரும் நடிகர் விஜய், நாயகனாக உருவாகி திரை பயணத்தில் 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை நெல்லை விஜய் மக்கள் மன்றத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
நெல்லை சந்திப்பில் உள்ள ராம் - முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் 29 இயர் ஆஃப் விஜயிசம் என்ற நிகழ்ச்சி நெல்லை மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரையரங்கு முன் பேண்டு வாத்தியங்கள் இசைக்க நூற்றுக்கணக்கானவிஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கதாநாயகனாக விஜய் அறிமுகமாகிய நாளைய தீர்ப்பு முதல் வர இருக்கும் பீஸ்ட் திடைப்பட காட்சிகள் வரை தொகுத்து ஒரு மணி நேர சிறப்பு காட்சியும் திரையரங்கில் திரையிடப்பட்டது ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கில் விசில் சத்தம் விண்ணை பிளந்தது பின்னர் 29 இயர் ஆஃப் விஜயிசம் என்ற பெயர் எழுதப்பட்ட கேக்வெட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர் ஆட்டம் பாட்டம் என விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திரையரங்கு களைகட்டி இருந்தது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Tamil Cinema