90s கிட்ஸ்களின் விருப்பமான படங்களில் ஒன்றான சூர்ய வம்சம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படத்தின் ஹீரோ சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
சரத்குமார், தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் திரைப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார்.
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாகின. தந்தை – மகன் இடையிலான உறவுதான் படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கும்.
சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு!
அதனைச் சுற்றி பல சுவாரசியமான கேரக்டர்களை அமைத்து, ஒரு ஃபீல் குட் மூவியாக இயக்குனர் விக்ரமன் படைத்திருப்பார். படத்தில் சின்னராசு மற்றும் சக்திவேல் கவுண்டர் என்ற 2 கேரக்டர்களில் சரத்குமார் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம்.
கதாநாயகிகள் கேரக்டரில் அம்மாவாக நடித்த ராதிகாவும், சின்னராசுவின் மனைவியாக நடித்த தேவயானியும் ரசிகர்களை கவர்ந்திருப்பார்கள்.
இவர்களைத் தவிர்த்து, மணிவண்ணன், சுந்தர் ராஜன், ஆனந்தராஜ், பிரியா ராமன், ஜெய் கணேஷ், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் தங்களது கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றனர்.
சில நேரங்களில் குட் பை அவசியம்... ரோஜா சீரியலை விட்டு விலகும் அர்ஜூன் சிபு சூர்யன்
90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த படமான சூர்ய வம்சம்,மீம் கிரியேட்டர்களுக்கு தொடர்ந்து கன்டென்டுகளை கொடுத்து வருகிறது.
ஞாயிற்று கிழமை வந்து விட்டால் சின்னராசை கையில் பிடிக்க முடியாது, ராதிகா பேசும் டயலாக் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் மீம்ஸ்களாக ரசிக்கப்பட்டன.
இந்நிலையில் சூர்யவம்சம் நினைவுகளை பகிர்ந்த சரத்குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ‘சூர்யவம்சம் படம் அடைந்த வெற்றியை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். இன்றளவிலும் சூர்யவம்சம் செய்த சாதனை முறியடிக்கப்படவில்லை. படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஊக்கத்தை மறக்கவே முடியாது. இதுபோன்ற இன்னுமொரு சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு அளிக்க கடுமையாக உழைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.