23 வருடங்களுக்குப் பின்... நடிகர் செல்வராகவன் நெகிழ்ச்சியான பதிவு

23 வருடங்களுக்குப் பின்... நடிகர் செல்வராகவன் நெகிழ்ச்சியான பதிவு

இயக்குநர் செல்வராகவன்

ரசிகர்கள் தான் தன்னை உருவாக்கினார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற செல்வராகவன், 23 வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கி வந்த நான் இன்று நடிகனாகியுள்ளேன். இதற்கெல்லாம் நான் எனது ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை உருவாக்கினார்கள்” என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)






முன்னதாக சாணிக்காயிதம் படத்தின் ஸ்கிரிப்டை படித்த செல்வராகவன் அசாதாரணமாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதுநாள் வரை திரைக்கு பின்னால் இருந்து நட்சத்திரங்களை இயக்கி வந்த செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாவதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாணிக் காயிதம் படத்துக்கு முன்பாக அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் ‘ராக்கி’. பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: