ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலீசாகும் முன்பே 24 விருதுகள்.. கவனம் ஈர்க்கும் '21 கிராம் பிலாசபி' திரைப்படம்!

ரிலீசாகும் முன்பே 24 விருதுகள்.. கவனம் ஈர்க்கும் '21 கிராம் பிலாசபி' திரைப்படம்!

21 கிராம்ஸ் பிலாசபி

21 கிராம்ஸ் பிலாசபி

வெளியாவதற்கு முன்பே ஏராளமான திரைப்பட விழாக்களில் 24 விருதுகளை வென்ற 21 கிராம்ஸ் பிலாசபி திரைப்படம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

21 கிராம்ஸ் பிலாசபி என்ற தமிழ் படம் வெளியாவதற்கு முன்பே, ரோம் டோக்கியோ உள்ளிட்ட பல திரைல்பட விழாக்களில் கலந்துகொண்டு 24 விருதுகளை வென்றுள்ளது.

புது முகங்களின் முயற்சியில் 21 கிராம்ஸ் பிலாசபி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அந்த திரைப்படத்தை யான் சசி என்பவர் இயக்க மோகணேஷ் என்பவர் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது, மிக முக்கியமானது என்ற கருத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை மாறுபட்ட புது முயற்சியில் எடுத்துள்ளனர்.

குறிப்பாக ரவுடிகளிடம் சிக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனை தலையை மட்டும் தெரியும் வகையில் மண்ணுக் அடியில் புதைத்து விடுகிறார்கள்.  உயிருக்கு ஆபத்தாக நிலையில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞனை காப்பாற்ற நினைக்கும் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் பூ ராம் நடித்துள்ளார். தந்தை - மகன் ஆகியோரின் இன்னல்கள் பின்னணியில் 21 கிராம் பிலாசபி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை முதலில் பைலட் திரைப்படமாக தொடங்கியுள்ளனர். அது பிறகு ஒரு முழு நீள திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழா, தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழா, ரோம்,  டோக்கியோ,  அமெரிக்கன் கோல்ட் பிக்சர் திரைப்பட விழாக்கள் என பல திரைப்பட விழாக்களில் 21 கிராம்ஸ் பிலாசபி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் அந்த திரைப்படம் 24 விருதுகளையும் வென்றுள்ளது. அதில் அறிமுக நாயகன் மோகணேஷ் 7 விருதுகளை வென்றுள்ளார்.

Read more: தயாராகிறது சர்தார் 2.. ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

அதேபோல் இயக்குனருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன.  திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema