ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமா விருதுகள் வழங்க விரைவில் குழு அமைக்கப்படும்: அமைச்சர் உறுதி!

சினிமா விருதுகள் வழங்க விரைவில் குழு அமைக்கப்படும்: அமைச்சர் உறுதி!

அமைச்சர் சாமிநாதன்

அமைச்சர் சாமிநாதன்

இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2015 க்கு பிறகு வெளியான படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய சாமிநாதன், சென்னை திரைப்பட விழாவிற்காக தமிழக அரசு 75 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் அமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி இந்தத் துறை இயங்கி வருவதாகவும் கூறினார்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கு பிறகு வெளியான படங்களை தேர்வு செய்து விருது வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த குழு அமைக்கப்பட்ட பிறகு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Also read... உருவக்கேலி.. கெட்டவார்த்தை.. சர்ச்சையில் சிக்கும் மலையாள திரையுலகம்..!

தற்போது தொடங்கியுள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.  அதில் ஒன்பது பிரிவுகளின் விருது வழங்கப்பட உள்ளது.  மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படும் பாரதிராஜாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அந்த அமைப்பு நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்பட திருவிழா 8 நாட்கள் நடைபெறும். உலகளவில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிய சிறந்த திரைப்படங்கள் இந்தாண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Film Festival