• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2022-ம் ஆண்டில் திரையில் கலக்கக் காத்திருக்கும் மாஸ் நடிகர்கள்

2022-ம் ஆண்டில் திரையில் கலக்கக் காத்திருக்கும் மாஸ் நடிகர்கள்

வலிமை

வலிமை

விக்ரமின் மகான், கோப்ரா, தனுஷின் மாறன், திருச்சிற்றம்பலம், விஷாலின் வீரமே வாகை சூடும், லத்தி, கார்த்தியின் விருமன், சிவ கார்த்திகேயனின் டான் உள்பட பல முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பாதிப்பால் 2020, 2021 திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் மோசமான ஆண்டுகளாக அமைந்தன. இந்த வருடம் அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. கமல், விக்ரம் படங்களும் வெளியாகவில்லை. மகான் தயாராக உள்ளது. ஆனால், இந்த வருடம் திரைக்கு வருமா என்பது சந்தேகமே. விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன், சிவ கார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் ஜெய் பீம், ரஜினியின் அண்ணாத்த என சொற்ப படங்கள்தான் வெளியானது.

ஜனவரி

அதற்கு நேர்மாறாக 2022 இன் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. இந்த வருடம் மாஸ்டர் பொங்கலுக்கு வெளியானது போல் 2022 பொங்கலுக்கு அஜித்தின் வலிமை வெளியாகிறது. மாஸ்டர் எப்படி 2021 இன் முதல் பிளாக் பஸ்டரோ அதே போல் வலிமையும் இருக்கும்.

பிப்ரவரி

பிப்ரவரி 4 ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது. பாண்டிராஜ், சன் பிக்சர்ஸ் என மெகா காம்பினேஷன் படம் ப்ளாக் பஸ்டராக அனைத்து சாத்தியங்களும் உள்ளது.

மார்ச்

மார்ச் மாதம் கமலின் விக்ரம் வெளியாகிறது. கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என்ற காம்பினேஷனுக்கே தியேட்டர்கள் அதிரும். அடுத்த வருடத்தின் நிச்சய வெற்றியில் விக்ரமுக்கு பிரதான இடம் உண்டு.

Also read... மீண்டும் சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...?

ஏப்ரல்

ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் வெளியாகிறது. விஜய், சன் பிக்சர்ஸ் என இதுவும் மெகா கூட்டணி. கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு ஹிட்கள் தந்த நெல்சன் திலீப்குமார் இயக்கம். படம் மாஸ்டரைவிட எவ்வளவு அதிகம் வசூலிக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

இந்த நான்கு மாதங்களில் மேலே உள்ள மாஸ் நடிகர்களின் படங்களுடன் விக்ரமின் மகான், கோப்ரா, தனுஷின் மாறன், திருச்சிற்றம்பலம், விஷாலின் வீரமே வாகை சூடும், லத்தி, கார்த்தியின் விருமன், சிவ கார்த்திகேயனின் டான் உள்பட பல முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. 2020, 2021 வருடங்களின் தொய்வை 2022 பூர்த்தி செய்யும் என்பதை இந்த படவரிசை உணர்த்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: