2020-ம் ஆண்டு ஒரே நாளில் ரிலீஸாகும் அஜித் - விஜய் படங்கள்?

கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் வீரம், ஜில்லா ஆகிய படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

news18
Updated: May 18, 2019, 3:22 PM IST
2020-ம் ஆண்டு ஒரே நாளில் ரிலீஸாகும் அஜித் - விஜய் படங்கள்?
விஜய்-அஜித்
news18
Updated: May 18, 2019, 3:22 PM IST
அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்த ஒன்றாகத் தான் இருக்கும். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் வீரம், ஜில்லா ஆகிய படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 64-வது படமும், அஜித்தின் 60-வது படமும் 2020-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது.

அட்லீ படத்தை அடுத்து மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 64-வது படமும், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60-வது படமும் 2020-ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு வெளியானால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

வீடியோ பார்க்க: ரஜினியின் அடுத்தப்படம் பாபா-2வா?

First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...