2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகைகள்... யார் யாருக்கு எந்தெந்த இடம்

2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகைகள்... யார் யாருக்கு எந்தெந்த இடம்
நடிகை நயன்தாரா
  • News18 Tamil
  • Last Updated: December 31, 2019, 12:19 PM IST
  • Share this:
2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகைகள் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு 5வது இடம் கிடைத்துள்ளது.  2018 -ம் ஆண்டு கனா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக  ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தன்னுடைய தோளில் தாங்க முடியும் என்று நிரூபித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ஆண்டு மெய் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மெய் திரைப்படம் வந்த தடமே தெரியாமல் போனாலும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புது அடையாளத்தையும் குடும்பங்கள் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்சிவகார்த்திகேயன் மாதிரியான வர்த்தக மதிப்புள்ள நடிகர் திரைப்படத்தில் இருக்கும்போது ஒட்டுமொத்த திரைப்படமும் ஐஸ்வர்யா ராஜேஷை சுத்தி நகர்ந்தது இன்னும் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான ஒரு நாயகியாக வலம் வருவார் என்பதை உணர்த்தியது. நாயகர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க கூடிய திரைப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை இயக்குநரை எழுத வைத்ததற்காகவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஐந்தாவது இடம்.மலையாள திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மஞ்சு வாரியர் 2019-ம் ஆண்டில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவிப்பு வெளியான நாளில் துவங்கி ஏன் 40 வயதை கடந்த ஒரு நடிகையை இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்திலும் பரவலாக நிலவியது.அத்தனை கேள்விகளுக்கும் தன்னுடைய முதிர்ந்த நடிப்பால் பதில் சொன்னார் மஞ்சுவாரியர். ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது வேறு ஒரு கதாபாத்திரமாகவே வாழ்வது வேறு என்ற வித்தியாசத்தை ரசிகர்களுக்கு உணர்த்தி அசுரன் திரைப்படத்தில பச்சையம்மா கதாபாத்திரமாகவே மஞ்சு வாரியர் வாழ்ந்திருந்தார்.

இனி தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய கதைகள் மஞ்சு வாரியரை தேடி செல்லும் என்ற நம்பிக்கையை முதல் படத்திலேயே ஏற்படுத்தியிருப்பதால் இந்த பட்டியல்ல நான்காவது இடத்தைப் பிடிக்கிறார் மஞ்சு வாரியர்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார் நடிகை அமலாபால். அமலாபால் நடிப்பில் ரத்னவேல் இயக்கத்தில் ஆடை திரைப்படம் 2019ம் ஆண்டில் வெளியான முக்கியமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு கதை களத்தில் துணிவான ஒரு முயற்சியோடு உருவாக இருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தாலும் இந்த படத்தில் நடிக்க துணிந்த அமலாபாலுடைய முடிவு பலருடைய பாராட்டுகளையும் பெற்றது.

‘ஆடை’ படத்தில் அமலாபால்


ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவதற்கு, பரபரப்பு ஏற்படுவதற்கு நடிகர்கள் மட்டுமே காரணமாக இருந்த காலம் மாறி ஒரு நடிகையா எந்த பக்கம் திரும்பினாலும் தன் படம் குறித்த பேச்சு நிலவ துணிவான முடிவெடுத்து நடித்ததற்காகவும், திரைப்படம் வெளியாகும் தேதியில் தன்னுடைய முழு சம்பளத்தையும் தயாரிப்பாளராருக்கு விட்டுக்கொடுத்து திரைப்படத்தை திரைக்கு கொண்டுவரக்கூடிய முயற்சிகளில் இறங்கி, ஒரு நடிகையா மட்டுமில்லாம சினிமாவுக்காக பெரும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அமலாபாலுக்கு இந்த பட்டியலில் மூன்றாவது இடம் கிடைக்குது.

ஜோதிகா - நடிகை


இந்த ஆண்டின் டாப் 5 நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்கிறார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையா இருந்து திருமணம் குழந்தைகள் என குடும்ப வாழ்க்கைக்குள் மூழ்கிய ஜோதிகா மீண்டும் நடிக்க வந்து சிறந்த நடிகைக்கான ரேசில் முன்னணியில் நிற்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2019ம் ஆண்டில் தனது பன்முக நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜோதிகா, ஆண்டின் துவக்கத்தில் வெளியான ராட்சசி திரைப்படத்தில் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு கதையை தேர்வு செய்து பள்ளிகளிலும், இந்தியக் கல்வித் துறைகளிலும் ஏற்பட வேண்டிய மாற்றத்தை அழுத்தமாக பேசியிருந்தார்.

சமூகத்தின் மீது அக்கறை உடைய ஒரு நாயகன் செய்யவேண்டிய காரியத்தை ஒரு நாயகியாக நம்பிக்கையுடன் கையிலெடுத்து செய்தது பலருடைய பாராட்டையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்பாட் ஒரு வர்த்தக திரைப்படமாக உருவானது. திருமணம் குழந்தைகள் என 40 வயதை கடந்துவிட்ட நடிகையாக இருந்தாலும் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் துள்ளாட்டம் போட்டார்.

திருமணத்திற்கு பின்னர் வயதாகி விட்டதாக முடங்கி விடும் பல பெண்களுக்கும் முன்மாதிரியாக ஜோதிகா எடுக்கும் முன்னெடுப்புகள் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆண்டின் இறுதியில் வெளியான தம்பி திரைப்படமும் ஜோதிகாவின் நன்மதிப்பை உயர்த்தி இருப்பதால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் நடிகையாக ஜோதிகா இருப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதால் இந்தப் பட்டியில் ஜோதிகாவிற்கு இரண்டாம் இடம் கிடைக்கிறது.2019 ஆம் ஆண்டிலும் தனது சிம்மாசனத்தில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறார் நயன்தாரா. ஆண்டின் துவக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கிராமத்து இளைஞனிடம் காதலில் விழுந்த பணக்கார மருத்துவராக எதார்த்த நடிப்பையும், அஜித்துடன் சண்டையிட்டு கோவத்தில் மிடுக்கை வெளிப்படுத்தும் போதும் தனது மிளிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

விஸ்வாசம் திரைப்படம் ஒருபுறம் வசூல் சாதனைகள் படைக்க நடிகர் விஜய் உடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் மற்றொரு புறம் புதிய வர்த்தக எல்லைகளை தொட்டது.

பிகில் படத்தில் நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா.


2019 ஆம் ஆண்டில் நயன்தாரா நடித்த இரு தமிழ் திரைப்படங்கள் ஏறத்தாழ 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழை தாண்டி சைரா நரசிம்ம ரெட்டி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் இந்தியாவின் பிரம்மாண்ட திரைப்படங்களில் நடிக்கும் நடிகைக்கான முதல் தேர்வாக நயன்தாரா தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

நடிக்கத் துவங்கி 15 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இரண்டுமுறை திரையுலகிற்கு முழுக்குப் போட்டு மூன்றாவது முறை தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுகமானாலும், 35 வயதை நெருங்கி விட்டாலும் எந்த சமரசங்களும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உருவாகியுள்ள நயன்தாராவிற்கு இந்த பட்டியலில் முதல் இடம் கிடைக்கிறது.
First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading