Ajith: அஜித் ரசிகர்கள் உருவாக்கிய 200 அடி போஸ்டர்!

200 அடி போஸ்டர்

விக்னேஷ் சிவனின் வரிகளில் பெரும்பாலான ரசிகர்களுக்கு திருப்தியில்லை. பேட்டயில் ரஜினிக்கு எழுதிய விவேக்கை வைத்து எழுதியிருக்கலாம் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

  • Share this:
    மன்றத்தை கலைத்தார், கட்அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்றார், போஸ்டர், தோரணம் கூடவே கூடாது, என்னைப் பார்க்கவும் வராதீர்கள் என்றார்.... இத்தனைக்குப் பிறகும் அஜித் என்றால் வெறியாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    அஜித் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி அஜித் ரசிகர்கள் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் அஜித் ரசிகர்கள் 200 அடி நீள மெகா போஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மெகா சைஸ் போஸ்டரை உருவாக்குவது கடினம் என்றால், அதை ஒட்டுவதற்கான இடம் கிடைப்பது அதைவிட கடினம். ஊரெல்லாம் தேடி கடைசியாக நீண்ட மதில் சுவரில் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

    200 feet poster created by Ajith fans, valimai movie, valimai update, thala ajith, ajith fans, ajith fan, அஜித், வலிமை அப்டேட், அஜித் ரசிகர்கள், ajith valimai update, ajith fans, valimai release, அஜித் படம், ajith 200 feet poster, ajith naanga vera maari, அஜித் நாங்க வேற மாதிரி, அஜித் 200 அடி போஸ்டர்
    200 அடி போஸ்டர்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்று வலிமை படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. விக்னேஷ் சிவன் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல் அது. விக்னேஷ் சிவனின் வரிகளில் பெரும்பாலான ரசிகர்களுக்கு திருப்தியில்லை. பேட்டயில் ரஜினிக்கு எழுதிய விவேக்கை வைத்து எழுதியிருக்கலாம் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 40 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: