20 கோடி பேர் பார்த்த ஜோதிகா நடித்த திரைப்படம்...!

ஜோதிகா

ராட்சசியின் இந்தி டப்பிங், மேடம் கீதா ராணி என்ற பெயரில் யூடியூபில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் இதுவரை 200 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜோதிகா நடிப்பில் 2019 இல் வெளிவந்த படத்தை 20 கோடி பேர்கள் பார்த்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவுடன் திருமணம் நடந்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கினார் ஜோதிகா. இரு குழந்தைகள் பிறந்து அவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்தபின், 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அவரது நடிப்பில் 2019 இல் வெளியான படம், ராட்சசி. ஜோதிகா பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இதில் நடித்திருந்தார். பத்திரிகையாளர் பாரதி தம்பியின் வசனத்தில், கௌதம்ராஜின் இயக்கத்தில் ராட்சசி வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராட்சசியின் இந்தி டப்பிங், மேடம் கீதா ராணி என்ற பெயரில் யூடியூபில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் இதுவரை 200 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. அதாவது 20 கோடிமுறை அப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு சாதனை.Also read... அட்லி, ஷாருக்கான் படம் - படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா!

பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் இந்தி டப்பிங்குகளே இதேபோல் அதிக பார்வைகளைப் பெறும். தமிழில் சுமாராகப் போன ஜோதிகாவின் படம் இந்தி டப்பிங்கில் இத்தனை பார்வைகளை பெற்றிருப்பது ஆச்சரியம்
Published by:Vinothini Aandisamy
First published: