விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 தமிழ் நடிகைகள் மீட்பு, 3 பேர் கைது

தமிழ் நடிகைகள் மீட்பு

விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிய வந்தது.

 • Share this:
  தமிழ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  COVID 19 தொற்றுநோய் இரண்டாவது அலையால் இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இயல்புநிலை எப்போது திரும்பும் என்பது இன்னும் தெரியாத நிலையில், மக்கள் முக கவசங்களை அணிய வேண்டும், சமூக விலகல் மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவிக்கும் இந்த கொடிய வைரஸிலிருந்து, நம்மை பாதுகாக்க தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

  இதற்கிடையே தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிய வந்தது. முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

  இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின் ஆகியோரை போலீசார் கைது செய்து, ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: