முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷாருக்கான் வீட்டில் திருட்டுத்தனமாக நுழைந்த இளைஞர்கள் - வெளியான காரணம்

ஷாருக்கான் வீட்டில் திருட்டுத்தனமாக நுழைந்த இளைஞர்கள் - வெளியான காரணம்

ஷாருக்கான்

ஷாருக்கான்

சம்பவத்தின்போது ஷாருக்கான் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாலிவுட் திரையுலகுக்கே புத்துணர்வு அளித்திருக்கிறது. உலக அளவில் இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அட்லி இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்க இருவர் காம்பவுண்டு சுவர் ஏறி இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்திருக்கின்றனர். வீட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுவந்த காவலர்கள் அவர்களைப் பிடித்திருக்கின்றனர்.

பிடிபட்ட இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரித்தபோது இருவரும் ஷாருக்கானின் ரசிகர்கள் என்றும் அவரைக் காண குஜராத்திலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். சம்பவத்தின்போது ஷாருக்கான் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். ஷாருக்கானைப் பார்க்கவா அவரது வீட்டில் திருட்டுத்தனமாக நுழைந்தார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

First published:

Tags: Shah rukh khan