உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலைக் குவித்த 2.O!

தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை 2.0 படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாக்கள் இதுவரை நிகழ்த்தியுள்ள பல வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

news18
Updated: December 6, 2018, 11:57 AM IST
உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலைக் குவித்த 2.O!
வசூல் சாதனை
news18
Updated: December 6, 2018, 11:57 AM IST
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரூ.600 கோடி பொருட்செலவில் உருவான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 2.0 திரைப்படம் வெளியான நாள் முதலே உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் தற்போது வரை ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Surging Into Week 2.. Crossing Borders.. Redefining History. #2Point0 Enters the 500 Crore Club! #2Point0EpicBlockbuster #2Point0 @2Point0movie @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson pic.twitter.com/Agq5ZMsxGB

— Lyca Productions (@LycaProductions) December 6, 2018தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை 2.0 படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாக்கள் இதுவரை நிகழ்த்தியுள்ள பல வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.
Loading...
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மேலும் பல சாதனைகளை 2.0 படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கிலும் 2.0 படம் பிரம்மாண்ட வசூல் செய்து வருகிறது

Also See

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்