Home /News /entertainment /

’சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்.. ரஜினி - ஷங்கர் திடீர் சந்திப்பு!

’சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்.. ரஜினி - ஷங்கர் திடீர் சந்திப்பு!

சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து 45 நிமிடங்கள் பேசியுள்ளார்.

சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்து உரையாடியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர்  இயக்கிய சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியானது.  அந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.  ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது.  இதையடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் 15 Years of Sivaji என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என AVM தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை இயக்குனர் ஷங்கர் சந்தித்து பேசியுள்ளார்.  இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.  அதில் தற்போது சினிமாவின் நிலை, ராம்சரணை வைத்து சங்கர் இயக்கும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இருவரும் விவாதித்துள்ளனர்.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு…

மேலும் சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம். அது ரஜினிகாந்தின் 170 அல்லது 171-வது படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Director Shankar, Kollywood, Rajinikanth, Tamil Cinema

அடுத்த செய்தி