அடுத்த வருடம் கொரோனாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற பயமா இல்லை பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் கிடைத்த தைரியமா தெரியவில்லை. இன்று மட்டும் 15 புதிய தமிழ்ப் படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் வர்த்தக தோல்விகளுக்கு அதன் ஊளைச்சதையும் ஒரு காரணம். அதாவது வதவதவென தயாராகும் படங்கள். யாருக்காக எதை நோக்கமாக வைத்து இத்தனை படங்கள் தயாராகின்றன என்று சினிமாவில் இருப்பவர்களுக்கே புரிவதில்லை. 2018-ல் கொரோனா தொற்றுக்கு முன்னால் மினிமம் பட்ஜெட்டில் தயாரான படங்கள் ஏறக்குறைய 175 இருக்கும். இதில் மேற்குத் தொடர்ச்சி மலை தவிர அனைத்தும் தோல்வி. ஒரு படம் கூட போட்ட காசை எடுக்கவில்லை.
விமர்சன ரீதியாக நல்ல படம் என பெயர் எடுத்ததா என்றால் அதுவும் இல்லை. பொழுதுப்போக்குக்கு உத்தரவாதம் உள்ள படங்களா என்றால் அதுவுமில்லை. மினிமம் பட்ஜெட் படங்களின் வெற்றி சதவீதம் 3 சதவீதத்தை இதுவரை தாண்டியதில்லை. அதனால் தான் இந்தக் கேள்வி எழுகிறது. யாருக்காக எதற்காக இந்தப் படங்கள் எடுக்கப்படுகின்றன?
தமிழ் ராக்கர்ஸ், சில்லாட்ட, ஓணான், ஒபாமா, மீண்டும், தீர்ப்புகள் விற்கப்படும், தண்ணி வண்டி, வேலன், மதுரை மணிக்குறவர், லேபர், சக்கரை புன்னகை, காட்டுப்புறா, இபிகோ, கரையேறும் கனவுகள், பிளான் பண்ணி பண்ணணும் என 15 படங்கள் இன்று மட்டும் வெளியாவதாக அறிவித்துள்ளன. இதில் எத்தனைப் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பதே கேள்விக்குறி. ஒருசில திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு எங்க படமும் ரிலீசாச்சு என்று கணக்கு மட்டுமே காட்ட முடியும். இந்த வருடம் வெளியான எந்த மினிமம் பட்ஜெட் படமும் லாபத்தை சம்பாதிக்கவில்லை என்பது மட்டுமல்ல படுதோல்வியும் அடைந்துள்ளன.
2022 லாவது இந்த நிலை மாற வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema