ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகள் கட்

துணிவு படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகள் கட்

துணிவு அஜித்

துணிவு அஜித்

வட இந்தியர்களை வடக்கன்கள் என ட்ரோல் செய்யும் டயலாக் ஒன்றும் தணிக்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு தணிக்கையின் போது 13 கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதவுள்ளதால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை அஜித் இடம்பெறும் அசத்தலான போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர்.

'துணிவு' படத்தில் தணிக்கையின் போது 13 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆம், கிட்டத்தட்ட 13 கெட்ட வார்த்தைகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் வட இந்தியர்களை வடக்கன்கள் என ட்ரோல் செய்யும் டயலாக் ஒன்றும் தணிக்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 'துணிவு' தயாரிப்பாளரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர் தான் என்பது இங்கு ஆச்சரியமான உண்மை. இதையடுத்து தயாரிப்பு தரப்பில், தனது விருப்பப்படி படத்தை இயக்க இயக்குநருக்கு சுதந்திரம் கொடுத்தது போல் தெரிகிறது.

துணிவு' வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். இதில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு!

'துணிவு' தணிக்கை செய்யப்பட்டுவிட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதியை இறுதியாக இன்னும் தயாரிப்பாளர்கள் அறிவிக்கவில்லை. மேலும் விஜய்யின் 'வாரிசு' படத்துக்கு ஒரு நாள் முன்னதாக 'துணிவு' வெளியாகும் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith