ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2022 போட்டியில் 12 தமிழ் படங்கள்!

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2022 போட்டியில் 12 தமிழ் படங்கள்!

சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022

சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022

பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன் உள்ளிட்ட படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெறுகிறது. 

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது. விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 48 நாடுகளில் இருந்து 107 படங்கள் திரையிடப்படுகிறது.

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன. CIFF-ன் இந்த ஆண்டு விழாவைப் பற்றிய விவரங்களை அறிவிக்கவும், போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்களின் பட்டியலை வெளியிடவும் விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி, பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது. ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான கசடதபற, வைபவ் நடிப்பில், அசோக் வீரப்பனின் பஃபூன், மனோ வீ கண்ணதாசனின் இறுதி பக்கம், ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஓ2 ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!

அதோடு இன்னும் வெளியாகாத பிகினிங், யுத்த காண்டம், மற்றும் ஆடு ஆகியவை அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Film Festival, International Film Festival