இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் புதிய திரையரங்குகளை நிறுவ மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறிய பட்ஜெட் தொடங்கி பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை எடுக்கப்படுகின்றன. அதில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் வருடத்திற்கு தலா சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகின்றன.
பெரிய படங்கள் தவிர பஞ்சாபி, மராட்டி, பெங்காலி ஆகிய உள்ளிட்ட மொழிகளில் சிறிய பட்ஜெட்டில் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த இந்திய படங்களுடன் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக திரையரங்குகளின் தேவை அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இயங்கி வந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால், பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டன. இதனால் தமிழகத்தின் திரையரங்கு எண்ணிக்கை 1,040 என்ற அளவில் குறைந்தன.
ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பல திரைப்படங்கள் வசூல் சாதனை படைக்க தொடங்கியுள்ளன. முன்னணி நடிகர்களின் படங்கள், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் முன் வந்துள்ளனர். ரசிகர்கள் அனைத்து படங்களுக்கும் திரையரங்கை நோக்கி வரவில்லை என்றாலும், முக்கிய படங்களுக்கு திரையரங்குகளுக்கு வருகின்றனர்.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு, அஜித் நடிப்பில் வெளியான துணிவு ஆகிய இரண்டு படங்களின் டிக்கெட், கேண்டீன், பார்க்கிங் ஆகிய திரையரங்கு சார்ந்த வியாபரம் மூலம் 400 கோடி வசூலாகியுள்ளது என திரைத்துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
திரையரங்குகளுக்கு ரசிகர்கர்கள் அதிகரித்திருந்தலும், நல்ல கட்டமைப்பு, நவீன வசதிகள் கொண்ட திரையரங்களுக்கு ரசிகர்கள் அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போதை சூழலில் இந்தியாவில் PVR-Inox, Cinepolis உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டும் என்கிறார்கள்.
அதில் தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 22 இடங்களில் மட்டும் PVR-Inox நிறுவனத்திற்கு 136 திரையரங்குகள் உள்ளன (Screens). இந்த திரையரங்குககுக்கு ரசிகர்களின் வருகை திருப்திகரமாக உள்ளன என கூறப்படுகிறது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வருகை அதிகரிப்பதால், அந்த நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,000 திரையரங்குகளை நிறுவ திட்டமிட்டு இருக்கின்றன. அதில் சில புதிய திரையரங்குகளும் அடங்கும். அதே போல சில பழைய திரையரங்குகளை வாங்கி, அதையும் புதிய தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளனர்.
மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!
தற்போதைய சூழலில் ஓ.டி.டியில் படம் பார்க்கும் சூழல் அதிகரித்தாலும், திரையரங்குகளின் வியாபாரமும் சிறந்தே உள்ளது. அதன் காரணமாகவே திரையரங்குகளின் எண்ணிக்கையை மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theatre