100 அரசுப் பள்ளிக் குழந்தைகளுடன் ஆகாயத்தில் வெளியாகும் சூரரைப் போற்று ‘சிங்கிள்’!

இந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் 100 பேரும் படக்குழுவினர் நடத்திய கட்டுரைப் போட்டியின் மூலம் தேர்வானவர்கள்.

100 அரசுப் பள்ளிக் குழந்தைகளுடன் ஆகாயத்தில் வெளியாகும் சூரரைப் போற்று ‘சிங்கிள்’!
சூரரைப் போற்று
  • News18
  • Last Updated: February 12, 2020, 2:25 PM IST
  • Share this:
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடு வானத்தில் வைத்து நடிகர் சூர்யா-வின் சூரரைப் போற்று திரைப்படத்தின்  சிங்கிள் நாளை வெளியாகிறது.

சூரைப் போற்று படத்தின் ‘வெய்யோன்சில்லி’ பாடலை விமானத்தில் பறந்துகொண்டே நடுவானில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் 100 அரசுப் பள்ளி மாணவர்கள் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து படக்குழுவினர் தங்களது முதல் சிங்கிளை வெளியிடுகின்றனர். இந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் 100 பேரும் படக்குழுவினர் நடத்திய கட்டுரைப் போட்டியின் மூலம் தேர்வானவர்கள். ‘தங்களது மிகப்பெரிய கனவு’ என்ற தலைப்பில் மிகச்சிறந்த கட்டுரைகளை எழுதிய 100 மாணவர்கள் இந்த விமானப் பயணத்துக்குத் தேர்வாகி உள்ளனர்.


சூரரைப் போற்று திரைப்படத்துக்காக ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனம் தன்னுடைய ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தை வழங்கியுள்ளது.மேலும் பார்க்க: பறக்கும் விமானத்தை நேரடியாகத் தாக்கும் மின்னல்... வைரல் வீடியோ!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading