நடிகர் சூரி வீட்டு விசேஷத்தில் நகைகள் திருடு போயிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் இப்போது வெற்றிமாறனின் புதிய படமான 'விடுதலை' படத்தில் நடிக்கிறார். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சூரி குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளுடன் நெருக்கமாக இருக்கிறார். கடந்த வாரம் சூரி தனது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் சுஷ்மிதாவின் திருமணத்தை நடத்தினார். இதில் முக்கிய நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.
மதுரையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில்
மணமகளின் அறையில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து சவரன் தங்கம் காணாமல் போயிருக்கிறது.
கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டதால், சூரி குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனினும் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து விட்டு, இப்போது
கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது சூரி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.