Colors Tamil : சண்டே சினி காம்போவில் இந்த வாரம் இரண்டு வெற்றித் திரைப்படங்கள்..

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு அன்று ‘நையப்புடை’ மற்றும் ‘வெல்வெட் நகரம்’ ஆகிய இரு திரைப்படங்கள் உலகளவில் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வார இறுதி நாட்களில் இரு வெற்றித் திரைப்படங்களை, உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சன்டே சினி காம்போ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விஜய கிரண் இயக்கத்தில் உருவான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான நையப்புடை திரைப்படமும், ஒரு புலன் விசாரணை ஊடகவியலாளர் குறித்த சிறப்பான கதை அம்சம் கொண்ட வெல்வெட் நகரம் திரைப்படமும் ஒளிபரப்பாகும். அதிரடி திருப்பங்கள்  கொண்ட இந்த இரு திரைப்படங்களை கண்டு ரசிக்க 2021 ஜுலை 11  ஆம் தேதி வரும் ஞாயிறு அன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.

  ஊழலுக்கு எதிராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் தொடர் போராட்டங்களையும் மற்றும் உள்ளூர் கிரிமினல் தாதா ஒருவரின் பிடியிலிருந்து ஒரு தம்பதியினரை மீட்பதில் அவரது அதிரடி நடவடிக்கையையும் நையப்புடை திரைப்படம் நேர்த்தியாக சித்தரிக்கிறது. வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் பழம்பெரும் இயக்குநர் S. A. சந்திரசேகரன் அற்புதமாக நடித்திருக்கிறார். வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அக்கறையுடன் பராமரிக்கிற தர்ம சிந்தனையுள்ள நபரான வெள்ளைச்சாமியின் அமைதியான வாழ்க்கை, ஒரு தம்பதியினருக்கு அடைக்கலம் கொடுக்கும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. தப்பி ஓடி அடைக்கலம் கேட்கிற ஜோடியாக பா விஜய் மற்றும் சாந்தினி தமிழரசன் நடித்திருக்கின்றனர்.

  Also Read : பிகில் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைப் பெற்ற சிறுவன்- நேரில் சந்திக்க நடிகர் விஜய் அழைப்பு

  இதையடுத்து வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் அறிமுக இயக்குநர் மனோஜ் குமார் நடராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெல்வெட் நகரம் உளவியல் திரில்லர் திரைப்படமாகும். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. ஒரு நடிகையின் கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டறிய முற்படும் ஒரு ஊடகவியலாளரைச் சுற்றி கதை பயணிக்கிறது.

  ரவுடிகளின் கும்பலால் அந்த பெண் ஊடகவியலாளர் சுற்றி வளைக்கப்படும்போது மிக ஆபத்தான சூழ்நிலையில் அவர் சிக்கிக்கொள்கிறார். எதார்த்தமான நடிப்பை நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், பார்க்கும் ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்குகிற பல தருணங்கள் இத்திரைப்படத்தில் இருக்கின்றன. பகத் குமாரின் அற்புதமான ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கிறது. கோலி சோடா திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்படும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசை மற்றும் பின்னணி இசை, பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே நகரச் செய்யப்போவது நிச்சயம்.

  ஆர்வமூட்டும் இந்த திரைப்படங்களின் ஒளிபரப்பை ஜூலை 11 ஆம் தேதி பிற்பகல் 1 மணி மற்றும் 3.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: