காத்திருப்பு முடிந்தது: இந்தியாவில் வெளியாகிறது கிறிஸ்டோபர் நோலனின் டெனட்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள டெனட் திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது என்று வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

காத்திருப்பு முடிந்தது: இந்தியாவில் வெளியாகிறது கிறிஸ்டோபர் நோலனின் டெனட்
டெனட்
  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், மார்ச் மாத இடையிலிருந்து நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் மூடப்பட்டன. இந்தியா மட்டுமல்ல, கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் திரையரங்கள் மூடப்பட்டன. அதனால், இந்த ஆண்டு கோடையாகவிருந்த பல படங்கள் வெளியாக முடியாமல் முடங்கின. தமிழகத்தைப் பொறுத்தவரை, மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால், கொரோனாவால் மூன்று படங்களும் வெளியாகத நிலையில், சூரரைப் போற்று படம் மட்டும் தற்போது ஓடிடியில் ரிலிஸ்ஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, இந்த ஆண்டு வெளியாகவிருந்த கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்துக்கு உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

மொமெண்டோ, இன்ஸ்செப்சன், இன்டஸ்டெல்லர் என அறிவியல் படங்களை அசாத்தியமாக கையாளும் கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகின்றனர். அவருடைய கடைசி படமான டன்கிர்க் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்ததால், டெனட் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. ஏற்கெனவே, டெனட் படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலத்தைக் கடத்தல் என்ற அறிவியல் கோட்பாட்டை ஒத்த மற்றொரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பது ட்ரைலர் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

 
கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தில் ஹீரோவாக ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியரான டிம்பிள் கபாடியா பிரியா எனும் கதாபாத்திரத்திலே நடித்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக டெனட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிட முடியவில்லை. திரையரங்குகள் திறக்கப்பட்டு சகஜ நிலை திரும்பிய நாடுகளில் படம் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை டெனட் பெற்றுள்ளது. இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், டெனட் எப்போது வெளியாகும் என்று கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இந்தநிலையில், டிசம்பர் 4-ம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர்ப்ரதர்ஸ் அறிவித்துள்ளது. அதனையடுத்து, உற்சாகமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் #tenet என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading