முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சித்தி 2 சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் திடீர் மாற்றம்

சித்தி 2 சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் திடீர் மாற்றம்

சித்தி 2

சித்தி 2

‘சித்தி 2’ தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டாம் என ராதிகாவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சித்தி 2 சீரியல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் பின்னி 2 என்ற டைட்டிலில் சன் நெட்வொர்க்குக்கு சொந்தமான ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் சித்தி 2 தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதைப் போல், தெலுங்கில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒளிபரப்பு நேரத்தை மதியம் 2.30 மணிக்கு சேனல் தரப்பில் மாற்றியிருக்கிறார்கள்.

இதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ரசிகர் ஒருவர் இரவு 7.30 மணிக்கு பின்னி 2 தொடரை ஒளிபரப்புங்கள் என்றும் மதிய நேரத்துக்கு மாற்ற வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டை அவர் ராதிகாவுக்கு டேக் செய்ய, அவர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்துக்கு டேக் செய்து சன் நெட்வொர்க்கின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

First published:

Tags: Radhika sarathkumar