சிரஞ்சீவியை இயக்கும் மோகன்ராஜா - ’மெகா ஸ்டார் 153’ பூஜை வீடியோ!

சிரஞ்சீவியை இயக்கும் மோகன்ராஜா - ’மெகா ஸ்டார் 153’ பூஜை வீடியோ!

சிரஞ்சீவியுடன் மோகன்லால்

‘மெகா ஸ்டார் 153’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார்.

 • Share this:
  மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். அதன் பூஜை நேற்று நடந்தது.

  நடிகர் பிரித்வி ராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘லூசிஃபர்’. 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல்வாதியின் மறைவுக்குப் பிறகு அவரது மருமகனுக்கும், வளர்ப்பு மகனுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருந்தார் ப்ரித்வி ராஜ். அதோடு வசூலிலும் சாதனை படைத்தது.  தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். ‘மெகா ஸ்டார் 153’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நேற்று இந்தப் படத்தின் பூஜை நடந்தது. இதில் கலந்துக் கொண்ட மோகன் ராஜா அதன் வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: