சிறுமியின் முடிவால் நெகிழ்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி - ட்விட்டரில் நன்றி தெரிவித்து வீடியோ!

மெகாஸ்டார் சிரஞ்சீவி

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை தங்களால் முடிந்த அளவு சில அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தொற்று பரவலை குறிக்க பல்வேறு மாநிலங்களும் லாக்கடவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன. இதனால் தினசரி தொழிலாளர்கள் உட்பட பலரும் வருமானம் இன்றி வாடி வருகின்றனர். அதே போல கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உரிய படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ வசதியின்றி அல்லல்படுகின்றனர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் கூட இன்னும் இதே நிலை நீடித்து வருகிறது. ஏழை மக்களின் பசி போக்கவும், உரிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை தங்களால் முடிந்த அளவு சில அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி கொரோனா நிவாரண அறக்கட்டளை என்கிற அமைப்பை உருவாக்கி திரையுலகினரிடம் நிதி திரட்டி பல உதவிகளை வருகிறார்.

அதே போல மெகாஸ்டார் சிரஞ்சீவியும் அவரது மகன் நடிகர் ராம் சரணும் இணைந்து ‘சிரஞ்சீவி ஆக்ஸிஜன் வங்கியை’ தொடங்கி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஆக்ஸிஜன் வங்கிகளை ஏற்படுத்த ரூ .30 கோடி செலவிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு மாநிலங்களில் ஆக்ஸிஜன் வங்கிகளை அமைப்பதில் சிரஞ்சீவி அறக்கட்டளைக்கு தனது சேமிப்பு மற்றும் பிறந்தநாள் செலவுகளை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ள பள்ளி சிறுமி ஒருவரை தெலுங்கு மெகா ஸ்டார் பாராட்டி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்ஷி என்ற பள்ளி சிறுமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், " பி.சீனிவாஸ் மற்றும் ஹனிகார் ஆகியோரின் இளைய மகள் சிறுமி அன்ஷி பிரபாலா, சிறிய வயதிலேயே தனது உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று நாட்டைச் சிதைக்கும் இந்த நேரத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும், இந்த பேரிடரிலிருந்து நாட்டு மக்கள் எப்போது முழுமையாக வெளியே வருகிறார்களோ அதுவே உண்மையான கொண்டாட்டம் என்று சிறுமி அன்ஷி முடிவெடுத்து தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிராகரித்துள்ளதை பற்றி கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. இது என்ன ஒரு அழகான செயல் அன்ஷி !!என் மனதை தொட்டு விட்டாய்.! நீ ஒரு அருமையான பெண். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!! என்று நெகிழ்ந்து பாராட்டி உள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம் சரண் மற்றும் அவரது ரசிகர்கள் மாவட்டந்தோறும் ஆக்ஸிஜன் வங்கிகளை நிறுவும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் ராம் சரண் மற்றும் அவரது குழுவினர் குறுகிய காலத்திற்குள் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: