• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தேவதாசி முறை மிகச்சிறந்த சிஸ்டம் என்று கூறிய தாயார்... மன்னிப்புக் கேட்ட சின்மயி...!

தேவதாசி முறை மிகச்சிறந்த சிஸ்டம் என்று கூறிய தாயார்... மன்னிப்புக் கேட்ட சின்மயி...!

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

  • Share this:
    தேசதாசி முறை பற்றி தனது அம்மா தெரிவித்த கருத்துக்காக பின்னணி பாடகி சின்மயி மன்னிப்பு கோரியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் #METOO புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணி பாடகி சின்மயி சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அதில் அவ்வப்போது பெண்கள் தன்னிடம் கூறும் #METOO புகார்களை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகிறார்.

    சின்மயியின் நடவடிக்கைகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சில எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சின்மயியின் தாயார் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார்.

    அதற்கான வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சின்மயி தாயார் பேசியிருப்பதாவது, “தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச்சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்” என்று கூறினார்.

    இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதை சின்மயிக்கு டேக் செய்திருந்தனர். இதையடுத்து அதில் தனது தாயார் தெரிவித்த கருத்துக்காக சின்மயி மன்னிப்பு கோரியுள்ளார்.

    மேலும் அந்த பதிவில் சின்மயி தெரிவித்திருப்பதாவது, ”தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை. அவர்கள் செயலுக்கு அவங்கதான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியுள்ளார்.



    மேலும் படிக்க: தளபதியின் திரைத்துறை தம்பி - எஸ்.ஜே.சூர்யா சொன்னது யாரைத் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: