வைரமுத்துவின் வாழ்த்தும்... சின்மயியின் ரியாக்ஷனும்...!
விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

பாடகி சின்மயி
- News18
- Last Updated: February 27, 2019, 9:17 AM IST
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அவர் மீது மீடூ புகார் கூறிய சின்மயி விமர்சித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அதிரடி தாக்குதலுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். 
“போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்” என்று வைரமுத்து ட்வீட் செய்திருந்தார்.
அவரது வாழ்த்தை பாடகி சின்மயி விமர்சித்துள்ளார். “இதற்கு முந்தைய ராணுவ நடவடிக்கை பற்றி அவர் (வைரமுத்து) எந்த பாராட்டும் தெரிவித்தது இல்லை. சுனாமி, புயல் போன்றவற்றுக்காக நிதியுதவி செய்தும் பார்த்தது இல்லை.
ராணுவம், பாஜகவை புகழ்ந்தால் ஆதரவு கிடைக்கும் என்று அவர் நினைக்கலாம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Also See...

கவிஞர் வைரமுத்து

போர்மீது விருப்பமில்லை.
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.#IndianArmyRocks #revengeforpulwama #IndianArmyOurPride
— வைரமுத்து (@vairamuthu) February 26, 2019
அவரது வாழ்த்தை பாடகி சின்மயி விமர்சித்துள்ளார். “இதற்கு முந்தைய ராணுவ நடவடிக்கை பற்றி அவர் (வைரமுத்து) எந்த பாராட்டும் தெரிவித்தது இல்லை. சுனாமி, புயல் போன்றவற்றுக்காக நிதியுதவி செய்தும் பார்த்தது இல்லை.
I didn’t see him praise any of the previous army exercises. I didn’t see him donate to any Flood / cyclone / Tsunami before :)
Desperation at the highest level. Maybe he thinks he keeps praising the Army / BJP he will get their support and he has the media to help him.
— Chinmayi Sripaada (@Chinmayi) February 26, 2019