ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு - சின்மயி கேள்வியும், மதன் கார்க்கியின் பதிலும்

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு - சின்மயி கேள்வியும், மதன் கார்க்கியின் பதிலும்

மதன் கார்கி மற்றும் சின்மயி

மதன் கார்கி மற்றும் சின்மயி

சின்மயி, வைரமுத்துவின் மகன் மதன் கார்கி தன்னை டார்ச்சர் செயததனாலேயே வைரமுத்துக்கு திருமண அழைப்பிதழ் வைத்தேன் என கூறியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அவர் கைதான நிலையில், கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் இணையத்தில் பேசுபொருளானது.

இந்த நேரத்தில் ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வைரமுத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வழங்குவது அவருக்கு செய்யும் அவமரியாதை என நடிகை பார்வதி விமர்சனம் செய்ய, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். விருது கமிட்டி, வைரமுத்துக்கு விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தனக்கு விருது வழங்குவதாக ஓஎன்வி கலாச்சார அகதாமி வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக வைரமுத்து தெரிவித்தார். சின்மயி வைரமுத்து மீது பல வருடங்களுக்கு முன் வைத்த பாலியல் குற்றச்சாட்டு மேலே சொல்லப்பட்ட காரணங்களால் மீண்டும் சர்ச்சையானது.

இந்த குற்றச்சாட்டுகளை சின்மயி வைத்த போது அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, "உங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வைரமுத்துவை எதற்கு உங்களின் திருமணத்துக்கு அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குனீர்கள்?" இதற்கு பதிலளித்த சின்மயி, திரையுலகில் அனைவருக்கும் பத்திரிகை வைக்கும் போது வைரமுத்துவை மட்டும் தவிர்க்கையில் அது தேவையில்லாத கேள்விகளை உருவாக்கும் அதனாலேயே அழைத்ததாக கூறினார். மேலும், தனது பிஆர்ஓ அனைவரையும் அழைத்தார், அப்படித்தான் வைரமுத்துவும் அழைக்கப்பட்டார் என விளக்கமளித்தார்

ஆனால், தற்போது சின்மயி, வைரமுத்துவின் மகன் மதன் கார்கி தன்னை டார்ச்சர் செயததனாலேயே வைரமுத்துக்கு திருமண அழைப்பிதழ் வைத்தேன் என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மதன் கார்கி, சின்மயி தனது தந்தையை சந்தித்து திருமண பத்திரிகை தர விரும்பியதாகவும், சின்மயி மீது அதிருப்தியில் இருந்த வைரமுத்து  சின்மயியை சந்திக்க மறுத்ததாகவும், சின்மயி கேட்டுக் கொண்டதால் தனது தந்தையிடம் பேசி சின்மயியை சந்திக்க அவரை ஒத்துக் கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார்

Also read... தமிழர் பிரச்சனை குறித்து பேசக்கூடாது - சமந்தா மௌனத்தின் பின்னணி!

வைரமுத்து ஏன் சின்மயியை சந்திக்க மறுத்தார் என்பதற்கான காரணத்தையும் மதன் கார்க்கி கூறியுள்ளார். 2012 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்த சின்மயி கடைசி நேரத்தில், வேறு நிகழ்ச்சி இருப்பதாகக்கூறி வரவில்லை. இதன் காரணமாக சின்மயி மீது அதிருப்தியில் இருந்த வைரமுத்து, அவர் திருமண பத்திரிகை வைக்க விரும்பியபோது, சின்மயியை சந்திக்க மறுத்துள்ளார். இந்த விளக்கத்தை அளித்திருக்கும் மதன் கார்கி, 150-வது ஆண்டுவிழா அழைப்பிதழையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மதன் கார்கி, சின்மயி இருவரில் யார் சொல்வது உண்மை? நீதிமன்றமே இந்த பிரச்சனையை கையிலெடுத்து இதற்கு ஒரு முடிவுகட்டினால் தான் உண்டு. 

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chinmayi, Vairamuthu