Home /News /entertainment /

விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன்: சின்மயி அறிவிப்பு

விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன்: சின்மயி அறிவிப்பு

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

  • News18
  • 2 minute read
  • Last Updated :
கவிஞர் வைரமுத்து மீது விரைவில் வழக்கு தொடரப்போவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மீ டூ விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, சிவரஞ்சனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் ’திரைத்துறையில் விசாகா கமிஷன் இல்லை. மீ டூ தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அதில் யார் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மீ டூவிற்கு பிறகு பெரும் அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் இதுகுறித்து பேச முன்வர வேண்டும்’ என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய பாடகி சின்மயி, ’வைரமுத்து விவகாரம் 2005-06 காலகட்டங்களில் நடந்தது. ஸ்விட்சர்லாந்தில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு நான்  சென்றதற்கு ஒரே ஆதாரம் என்னுடைய பாஸ்போர்ட்தான். 2006-க்குப் பிறகு பலமுறை நாங்கள் வீடு மாற்றிவிட்டோம். தற்போது, அதை தேடி வருகிறேன். அந்த பாஸ்போர்ட் கிடைக்கும்பட்சத்தில் விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய சின்மயி, ’மதன் கார்க்கிக்கு (வைரமுத்துவின் மகன்) எனது திருமண அழைப்பிதழை கொடுத்தபோது, அப்பாவிற்கு வைத்தீர்களா? என்று கேட்டார். தர்ம சங்கடத்திற்கு ஆளாகக்கூடாது என்பதற்காக வைரமுத்துவிற்கும் அழைப்பிதழை கொடுத்தேன். அதேபோல், எனது திருமணத்தில் வைரமுத்துவின் காலில் மட்டும் நான் விழவில்லை. ஆசி வாங்குவதற்காக மற்றவர்கள் காலில் விழுந்ததுபோல்தான் அவரிடமும் செய்தேன்’ என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது..


அவர் மேலும் கூறுகையில், ’ஆண்டாள் சர்ச்சைக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். என்னுடன் இருக்கும் சக பாடகி ஒருவர் வைரமுத்து விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக வெளியில் சொன்னால் எங்கு தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்களோ? என அச்சப்படுகிறார். திருமணத்திற்கு முன்பு, இதுபோன்ற புகார் வெளியில் வந்தால் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்ற அச்சத்தில், இத்தனை நாட்கள் சொல்லவில்லை. இப்போது, எனது கணவர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வைரமுத்து என்னை அழைத்தார். நான் மறுத்தேன். அதற்கு என்னையும், என் தாயாரையும் வைரமுத்து வசைபாடினார் என்றார் சின்மயி.

வீடியோ:
Published by:DS Gopinath
First published:

Tags: Singer Chinmayi, Vairamuthu

அடுத்த செய்தி