• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’இதயத்தை திருடாதே’ சீரியலில் இணைந்த குட்டி பிரபலம்

’இதயத்தை திருடாதே’ சீரியலில் இணைந்த குட்டி பிரபலம்

இதயத்தை திருடாதே 2

இதயத்தை திருடாதே 2

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் சின்னத்திரையில் பிரபலமான குட்டி தேவதை ‘ஆழியா’ இணைந்துள்ளார்.

  • Share this:
தமிழில் அண்மையில் ஒளிபரப்பை தொடங்கிய கலர்ஸ் தமிழ் பல்வேறு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. முன்னணி தொலைக்காட்சிகளாக இருக்கும் சன் டீவி, விஜய் டீவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இணையாக நாடகங்கள் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ தொடர் பிரபலமாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் புதிதாக குட்டி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமில்லை ‘ ஆழியா’. இவர் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




இதற்கான புரோமோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதையும், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதையும் விளக்கியுள்ளார். கதைப்படி, சிவா - சஹானா தம்பதியின் மகளாக ஐஸ்வர்யா இருக்கிறார். இவர்களுக்கு இடையே ஏற்படும் குடும்பச் சண்டையில் சஹானாவும், சிவாவும் பிரிந்துவிடுகின்றனர். குழந்தை ஐஸ்வர்யா, தாயின் அரவணைப்பிலேயே வளர்கிறார்.

சஹானா கட்டுமான நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் வெற்றி பெறுகிறார். மிக பிரபலமான தொழிலதிபராக இருக்கும் சஹானா, தந்தை யார் என்று கூறாமலேயே குழந்தை ஐஸ்வர்யாவை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் குழந்தை ஐஸ்வர்யாவுக்கு தன்னுடைய தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. இது குறித்து தன் தாயிடம் கூறும் அவர், தந்தை சிவாவை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். சிவாவுக்கும் தன் குழந்தை யார்? எப்படி இருக்கிறார்? என்ற விவரம் எதுவுமே தெரியாது.

Also read... உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தயாராகும் ஜெய் பீம் - புகைப்படங்கள் தொகுப்பு

இதற்கிடையே, குழந்தை ஐஸ்வர்யா தன்னுடைய தந்தையை கண்டுபிடிக்க எப்படி முயற்சிக்கிறார்?, தாய் சஹானாவின் முடிவு என்ன? என்பது அடுத்தடுத்து வர இருக்கும் டிவிஸ்டுகளாக கதைக்களத்தில் உள்ளது. 8 வயது சிறுமியான ஆழியா, நாயகி தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கியூட் எக்ஸ்பிரசன்ஸ் மற்றும் அழகான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும், குழந்தை நட்சத்திரமாக வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் ஆழியா நடித்துள்ளார். தனக்கென ஒரு யூ டியூப் சேனலை வைத்திருக்கும் ஆழியா, பிரபல யூ டியூபராகவும் இருக்கிறார்.

இதயத்தை திருடாதே தொடரில் லீட் கதாப்பாத்திரங்களான சிவா கேரக்டரில் நவீன் குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கேரக்டரான சஹானா கதாப்பாத்திரத்தில் ஹிமா பிந்துவும், மித்ராவாக மௌனிகா தேவியும் நடிக்கின்றனர். இதயத்தை திருடாதே தொடரின் முதல் அத்தியாயம் வெற்றிப்பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதல் அத்தியாயத்துக்கு கிடைத்த அதே வரவேற்பு, இதற்கும் கிடைக்கும் என நாடகக்குழு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: