ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிக்கு, பண்டி - குழந்தைகளை கவர்ந்த புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

சிக்கு, பண்டி - குழந்தைகளை கவர்ந்த புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

சிக்கு, பண்டி - குழந்தைகளை கவர்ந்த புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

சிக்கு, பண்டி - குழந்தைகளை கவர்ந்த புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

குழந்தைகளை கவர்ந்த புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்களான சிக்கு, பண்டியின் சேட்டைகளை குழந்தைகள் பெரிதும் ரசிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை கட்டிப் போட்டு அமைதியாக உட்கார வைக்கும் சக்தி கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு உண்டு. டாம் அண்ட் ஜெர்ரி தொடங்கி கார்ட்டூன் உலகில் ஏராளமான கதாபாத்திரங்கள் பல்லாண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருந்தாலும் புதிய கதாபாத்திரங்களுக்கும் பஞ்சமில்லை. மோட்டு பட்லு, சோட்டா பீம் என புதிது புதிதாக வரும் கதாபாத்திரங்களும் குழந்தைகளை கவர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த வரிசையில் தற்பொழுது சிக்கு, பண்டி என இரண்டு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது நிக் தொலைக்காட்சி. அதில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிக்கு பண்டி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வளாகத்திற்கு வந்த சிக்கு பண்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் நடனமாடியும் சேட்டைகள் செய்தும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். பிரபல நட்சத்திர குழந்தைகளான ஐஸ்வர்யா மற்றும் ரியா ஆகியோர் இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டனர்.

நிக் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிக்குவும், பண்டியும்.

First published:

Tags: Child, Kids, News On Instagram