ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' - முதல்வர் ஸ்டாலின்

''இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' - முதல்வர் ஸ்டாலின்

ராஜினி காந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய முதல்வர்

ராஜினி காந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய முதல்வர்

Rajinikanth Birthday | ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதுமே அவரது ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரையில் தோன்றிய இவர் தற்போது உலகமே வியந்து பார்க்கும் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம், கோவில், மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்டவை ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also see... ரஜினி பிறந்த நாளையொட்டி 73 கிலோவில் உருவாக்கப்பட்ட கேக்… ரசிகர்கள் கொண்டாட்டம்…

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Birthday, Chennai, CM MK Stalin, Rajinikanth