அமீர் பட பாடலை வெளியிடும் முதல்வர்... அப்படி என்ன ஸ்பெஷல்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - அமீர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி 'நாற்காலி' திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இயக்குநர் அமீர் நடித்திருக்கும் ‘நாற்காலி’ படத்தின் ஒரு பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுகிறார்.

  இயக்குனரும் நடிகருமான அமீர் தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. இந்தப் படத்தை 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். சுந்தர் சி நடித்த 'இருட்டு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, வி.இசட்.துரை இந்த 'நாற்காலி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

  இந்தப் படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி 'நாற்காலி' திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மறைந்த “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” எனத் தொடங்கும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 16-ம் தேதி மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொள்கிறார்.

  வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: