நடிக்கக் கடினமாக இருந்தப் படம்! ’சப்பக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உடைந்தழுத தீபிகா படுகோன்

இத்திரைப்படம் வருகிற 2020 ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

நடிக்கக் கடினமாக இருந்தப் படம்! ’சப்பக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உடைந்தழுத தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
  • News18
  • Last Updated: December 10, 2019, 8:08 PM IST
  • Share this:
ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் சந்திக்கும் தொடர் போராட்டங்களைக் காட்டும் திரைப்படமாக வெளியாக உள்ள ‘சப்பக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

நடிகை தீபிகா படுகோன் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஆக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டே படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராசி, தல்வார் போன்று உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை இயக்கிய மேக்னா குல்சார் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தீபிகா படுகோன் மற்றும் மேக்னா ஆகிய இருவருடன் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


சப்பாக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தீபிகா படுகோன், ‘நான் நடித்த படங்களிலிலேயே மிகவும் கடினமாக இருந்த படம் இதுதான் என்று என்னால் கூற முடியும். அந்த கதாப்பாத்திரத்தின் காரணமாக அல்ல. அந்தப் படத்தின் ஒப்பணையின் காரணாமாக கடுமையாக இருந்தது. நான் மிகவும் பொறுமையான ஒருவர்தான். என்னுடைய படங்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

பலரை சென்றடையவேண்டும் என்றதற்காகத் தான் தயாரிப்பாளராக உருவெடுத்தேன். சினிமா ஒரு வலிமையான ஆயுதம். அதனை நீங்கள் அர்த்தத்துடன் பயன்படுத்த வேண்டும். அதனை நீங்கள் அறிவுப்பூர்வமாக பயன்படுத்தவேண்டும். அதனை நான் ஒவ்வொரு முறையும் செய்ய முடியாது. ஆனால், இந்த முறையாவது உள்நோக்கத்துடன் செய்ய விரும்பினேன்’ என்று தெரிவித்தார். இந்தப் படம் குறித்து பேசும்போது தீபிகா படுகோன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.


 
View this post on Instagram
 

#DeepikaPadukone gets emotional during #chhapaak trailer launch in #mumbai today #video #paparazzi #instadaily #manavmanglani


A post shared by Manav Manglani (@manav.manglani) on

இத்திரைப்படம் வருகிற 2020 ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. பத்மாவத் திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தீபிகாவின் சப்பாக் வெளியாகிறது.மேலும் பார்க்க: இந்தியர்கள் சூட்கேஸ்களாக இருந்திருக்கலாம்... சூட்கேஸ்களைப் பாராட்டும் ட்விட்டர்...!
First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்