ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே: தத்ரூபமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே: தத்ரூபமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சபாக் பட ஃபர்ஸ்ட் லுக்

சபாக் பட ஃபர்ஸ்ட் லுக்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மியின் வாழ்கையை மையப்படுத்தி சபாக் என்ற திரைப்படம் உருவாகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சபாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  டெல்லியைச் சேர்ந்த லக்‌ஷ்மி அகர்வால் என்பவர் காதலிக்க மறுத்த காரணத்துக்காக ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். பல இன்னல்களைக் கடந்து வெற்றிகரமான பெண்ணாக வலம் வரும் லக்‌ஷ்மி அகர்வால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்விற்கென தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர்களின் சிகிச்சைக்கும் உதவி வருகிறார். இதற்காக 2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி கவுரவப்படுத்தினார்.

  இவரது பிரசாரத்தின் மூலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 6 பெண்களுக்கு டெல்லி அரசு பணி வழங்கியது. லக்‌ஷ்மி அகர்வாலுக்கு துணையாக இருந்து தைரியம் அளித்த சமூக ஆர்வலர் அலோக் தீக்‌ஷித் இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புகு என்ற பெண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில் லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி சபாக் என்ற திரைப்படம் உருவாகிறது. இதில் லக்‌ஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். ராசி படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இந்தப் படத்தை இயக்குகிறார். படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சபாக் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காணப்படுகிறார்.

  பிக்பாஸ் நடிகை - இயக்குநர் இடையே மோதல்! - படப்பிடிப்பில் நடந்தது என்ன? - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Acid attack, Actress Deepika padukone