பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் அப்பாவாக நடிக்கவில்லை என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்த இயக்குநர் சேரன் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு லாஸ்லியாவின் அப்பாவாக வாழ்ந்த சேரனை பார்வையாளர்களில் சிலர் அவர் அப்பாவாக நடிப்பதாகவும், லாஸ்லியா மீது பொய்யான பாசத்தைப் பொழிவதாகவும் பேசினர். நிகழ்ச்சியில் சகபோட்டியாளர்களிலும் ஒரு சிலர் அவ்வாறு பேசினர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராஜாவுக்கு செக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சேரன், என் குழந்தை பிறக்கும் போது, நண்பனிடம் சென்று பணம் வாங்கி வருவதற்குள் குழந்தை பிறந்துவிட்டது. அப்பாவாக உணரும் தருணம் மிக அழகானது. அதை கடவுள் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சேரன் | லாஸ்லியா
அந்த நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் நான் அப்பாவாக நடிக்கவில்லை. ஒரு அப்பாவாகவே உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தேன். அப்பா - மகள் பாசத்தை நான் பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன். தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடே இல்லை.
நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது என்னுடைய நண்பரான வசந்தபாலன் கூறிய விஷயம் உள்ளே இருக்கும்போதே எனக்குத் தெரியும். அப்போது நான் கூறும்போது அவர் என்னுடைய நண்பர். என்மேல் உள்ள அக்கறையில் தான் கருத்து தெரிவித்திருப்பார் என்று கூறினேன்.
அக்கறையுள்ளவன் மட்டுமே பக்கத்தில் நிற்பான். அக்கறையுள்ளவன் தான் கேட்பான். மற்றவர்கள் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். வசந்தபாலனின் அக்கறைக்கு நான் தலை வணங்குகிறேன்” என்றார்.
வீடியோ பார்க்க: அப்பாவிப் பெண் என்பதால் என் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் - ஸ்ருதிஹாசன்
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.