• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னை தண்ணீர் தட்டுப்பாடு... ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை.. தெலுங்கு நடிகர் வேதனை

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு... ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை.. தெலுங்கு நடிகர் வேதனை

நடிகர் லியானர்டோ டிகாப்ரியா | நடிகர் மனோஜ்

நடிகர் லியானர்டோ டிகாப்ரியா | நடிகர் மனோஜ்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு மீதான விவகாரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை என்று நடிகர் மனோஜ் மஞ்சு கூறியுள்ளார்.

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், ஆகிய 4 நீர் நிலைகளும் தற்போது முற்றிலும் வரண்டு போயுள்ளன. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததும் இதற்கு காரணம்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மனோக் மஞ்சு சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்க்குமாறு தெலுங்கு மக்களுக்கு கோரிக்கை வைத்து தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

அந்த பதிவில், “தெலுங்கு மக்களுக்கு தேவைப்பட்டபோது உணவு, தண்ணீர், உறைவிடம், கொடுத்தது சென்னை. இப்போது நம்முடைய முறை. நாட்டின் ஆறாவது பெரிய நகரம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. நானும் என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் நான் வளர்ந்த பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க இருக்கிறோம். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன்'' என்று கூறினார்.

அவரின் இந்த பதிவுக்கு தெலுங்கு ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகளும் எழுந்தன.



இதையடுத்து டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டிகாப்ரியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தற்போது இருக்கும் நிலையில் இருந்து சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். புகைப்படத்தில் உள்ள கிணறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது. நகரம் தண்ணீரில்லாமல் உள்ளது. நான்கு ஏரிகள் வறண்டு போன பிறகு, இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது.

குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். தண்ணீர் பிரச்னை காரணமாக ஹோட்டல்கள் மூடப்படுகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்ய அரசு அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் சென்னை மக்கள் மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

மேலும் தனது அடுத்த பதிவில் நம்மால் தான் இந்த உலகை மாற்ற முடியும் என்றும் டி காப்ரியோ தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான லியானர்டோ டிகாப்ரியாவின் இந்த அறிக்கையை குறிப்பிட்டு, தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் மனோஜ் மஞ்சு.



அதில், “நான் சென்னைக்கு உதவியதற்காக யாரெல்லாம் என்னை எதிர்மறையாக விமர்சனம் செய்தார்களோ அவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். அதையும் தாண்டி மனிதர்கள்.

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு மீதான விவகாரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை. தயவு செய்து மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருங்கள். தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவும் போது சாதி, மதம், மாநில வேறுபாட்டை புறந்தள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகர் மனோஜ் மஞ்சு சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது பல்வேறு உதவிகளை செய்தவர் என்பதோடு, சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: