Home /News /entertainment /

Most Desirable Men Television 2020 : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களின் பட்டியல் - முதலிடத்தில் அஸ்வின்!

Most Desirable Men Television 2020 : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களின் பட்டியல் - முதலிடத்தில் அஸ்வின்!

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களின் பட்டியல்

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களின் பட்டியல்

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 20 பிரபல ஆண்களும் திறமையால் புகழ் பெற்றவர்கள். மேலும் சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர்களை கொண்டவர்கள்.

2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 20 பிரபல ஆண்களும் திறமையால் புகழ் பெற்றவர்கள். மேலும் சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர்களை கொண்டவர்கள். மேலும் டிவி ஷோக்களில் அவர்களின் நடிப்பால் ஆக்கிரமித்திருந்தனர். இவர்கள் யார் யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

1. அஸ்வின் குமார்ஸ்டார் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அஸ்வின் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட துறையில் பணியாற்றுகிறார். இவர் 2015-ஆம் ஆண்டில் மணி ரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதே வருடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ரெட்டை வால் குருவி” சீரியலில் நடிக துவங்கியதால் மூலம் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார்.

குக் வித் கோமாளி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்களில் முதலிடம் பெற்றுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இந்த பட்டியலில் முதலிடம் பெற்றதன் மூலம் சாதனை படித்து விட்டதை போல உணர்வதாக கூறுகிறார் அஸ்வின்.

2. பாலாஜி முருகதாஸ்சர்வதேச மாடலிங் நிகழ்சிகள் மற்றும் அழகு போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த சென்னை பையன் ஏற்கனவே பேஷன் உலகில் தடம் பதித்து புகழ் பெற்றிருப்பினும், பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட போது, இவர் வெளிப்படுத்திய அவரது ஸ்டைல் மற்றும் கவரும் லுக் பாலாஜி முருகதாஸை தமிழக தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இவர் சொந்த வாழ்க்கை பற்றி பல்வேறு வதந்திகள் இருப்பினும் இன்னும் இவர் சிங்கிளாக இருப்பதாகவே தெரிகிறது.

3. ஆர்.ஜே விஜய்தனது சிறப்பான ஆங்கரிங் மூலம் காமெடி கேங்க்ஸ்டர் மற்றும் சூப்பர் ஃபேமிலி போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் ரசிகர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்குகிறார். இவர் ஒரு பாடலாசிரியராகவும் திகழ்கிறார், விரைவில் படங்களிலும் நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 ஆண்கள் பட்டியலில் இவர் மூன்றாமிடத்தில் உள்ளார். பிப்ரவரி 9, 2019 அன்று மோனிகா தங்கராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆண் குழந்தை உள்ளது.

4.சோம் சேகர்ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள்‌ போன்றவற்றில் நடித்துள்ளார் சோம் சேகர். இதனால் இவர் பலமுறை டிவியில் தோன்றி பழக்கமான முகமாக இருந்திருந்தாலும் கூட, பிக் பாஸ் சீசன் 4ல் இவர் வெளிப்படுத்திய திறமையே இவரை பிரபலமாக்கியது. இவரது பணிவு மற்றும் நட்பு குணம் பிக் பாஸ் பங்கேற்பாளர்களை மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் கவர்ந்தது.

5. ஆரி அர்ஜுனன்ஆரி என்று அழைக்கப்படும் ஆரி அர்ஜுனன் கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ | தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் - ரம்யா பாண்டியன் முதலிடம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற போது போட்டியாளர்களிடம் இவர் நடந்து கொண்டவிதத்தால் வெற்றியாளராகி ரசிகர்களை மனதை கவர்ந்தார். நதியா என்பவரை காதலித்து வந்த ஆரி நவம்பர் 18, 2015 அன்று திருமணம் செய்து கொண்டார்.

6. நந்தன் லோகநாதன்இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற சீரியலிலும், சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலில் கவின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நந்தன் லோகநாதன். இவரது மனைவி பெயர் அனிதா.

7. நித்தின் அய்யர்இசைக்கலைஞராக இருந்து நடிகராக மாறிய இவர் பெங்களூருவை சேர்ந்தவர். என்றென்றும் புன்னகையில் தனது நடிப்பு திறமை மூலம் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.

8. சிபு சூரேன்பெங்களூருவை சேர்ந்த நடிகர் சிபு சூரேன் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தனது நடிப்பால் பல தமிழர்களின் இதயங்களை வென்றுள்ளார். இவருக்கு ஒரு மென்பொருள் பொறியாளருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிகிறது.

9. ரியோ ராஜ்

ரியோ ராஜ்


தனது திரைப்படம் அறிமுகமான பிறகும், பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் வந்த ரியோ சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ரசிகர்களை கவர தவறவில்லை. இவர் நடித்துள்ள இப்போது பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது.

10. விஷ்ணு விஜய்நீண்ட காலமாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சத்யா சீரியல் மூலம் அமுல் பேபியாக பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார்.

இவர்களை தவிர இந்த பட்டியலில் 11 முதல் 20 இடங்கள் முறையே கதிரவன் கே, அக்‌ஷய் கமல், விராட், புவி அரசு, குமரன் தங்கராஜன், பிரஜின் பத்மநாபன், ரக்ஷன், ராகுல் ரவி, சித்து, நவின் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Aari Arjunan, Actor Rio Raj, Balaji murugadoss, Television Program

அடுத்த செய்தி