Home /News /entertainment /

சர்வதேச திரைப்பட விழா: சென்னையில் 13-ம் தேதியில் இருந்து தொடக்கம்

சர்வதேச திரைப்பட விழா: சென்னையில் 13-ம் தேதியில் இருந்து தொடக்கம்

சர்வதேச திரைப்பட விழா

சர்வதேச திரைப்பட விழா

தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் 96, பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சிமலை, இரும்பு திரை, அபியும் அனுவும், வட சென்னை, வேலைகாரன் உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இந்தாண்டு திரையிட பட உள்ளது.

  • News18
  • Last Updated :
    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13-20-ம் தேதிகள் வரை நடைபெறுகிறது.

    சென்னையில் இந்த வருடம் நடக்கும் 16-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆறு பிரிவுகளின் கீழ் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

    இந்த திரைப்பட விழாவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், கொரியா உள்ளிட்ட 59 நாடுகளிலிருந்து 150 படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.

    சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ ஆகிய தியேட்டர்களிலும் தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய இடங்களிலும் படங்கள் திரையிடப்படும். திரையிடும் இடங்கள் அருகருகே இருப்பதால், சினிமா ஆர்வலர்களுக்கு இந்த முறை அலைச்சல் இருக்காது.

    தமிழ் படங்களுக்கான போட்டியில் 96, பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சிமலை, இரும்புத் திரை, அபியும் அனுவும், வட சென்னை, வேலைகாரன் உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இந்தாண்டு திரையிட பட உள்ளது.

    8 நாட்கள் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க 1000 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். உதவி இயக்குநர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்குப் பதிவு கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai, International Film Festival

    அடுத்த செய்தி