மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக  இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தை 400 இணையதளங்கள் மற்றும் 9 கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பு நிறுவனமான சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ,(seven screen studio)
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

Also read... Gold Rate | சற்று குறைந்தது தங்கத்தின் விலை... உயர்ந்தது வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்களில் வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி மாஸ்டர் திரைப்படத்தை 400 இணையதளங்கள் மற்றும் 9 கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: