• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னை 28 டீம் வெளியிட்ட ‘கோ கொரோனா கோ’ வீடியோ...!

சென்னை 28 டீம் வெளியிட்ட ‘கோ கொரோனா கோ’ வீடியோ...!

Youtube Video

ஊரடங்கை மீறுவோருக்கு காவல்துறையினர் கொடுக்கும் தண்டனைகள், பிரதமர் சொன்னபடி விளக்கேற்றியது, கைதட்டியது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றையும் காமெடியுடன் கலந்து கொடுத்துள்ளது சென்னை 28 படக்குழு.

  • Share this:
    சென்னை 28 படக்குழுவினர் ஒன்றிணைந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மதியம் 1 மணி வரை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி திரைத்துறை பிரபலங்களும் சமூகவலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சென்னை 28 படக்குழுவினர் காமெடியுடன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    வீட்டினுள்ளேயே கிரிக்கெட் விளையாடுவது போல் ஆரம்பமாகும் அந்த வீடியோவில் கைகளை சுத்தமாக கழுவுதல், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஊரடங்கை மதிக்காமல் வெளியே செல்லக் கூடாது உள்ளிட்ட பல விஷயங்களும் பேசப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கை மீறுவோருக்கு காவல்துறையினர் கொடுக்கும் தண்டனைகள், பிரதமர் சொன்னபடி விளக்கேற்றியது, கைதட்டியது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றையும் காமெடியுடன் கலந்து கொடுத்துள்ளது சென்னை 28 படக்குழு.

    இறுதியாக வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, மக்களுக்காக பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து ‘கோ கொரோனா’ என்று முழக்கமிட அவரைத் தொடர்ந்து சிலரும் ‘கோ கொரோனா கோ’ சொல்ல வீடியோ முடிவடைகிறது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: