முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Sunny Leone: சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் செம்பன் வினோத்!

Sunny Leone: சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் செம்பன் வினோத்!

சன்னி லியோனுடன் இருக்கும் செம்பன் வினோத்

சன்னி லியோனுடன் இருக்கும் செம்பன் வினோத்

ஷீரோ படத்தைத் தொடர்ந்து மேலும் பல மலையாளப் படங்களில் நடிக்க சன்னி லியோனுக்கு வாய்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மலையாளத்தின் பிரபல நடிகர் செம்பன் வினோத் சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'நல்ல உள்ளம்' என்று கமெண்ட் செய்துள்ளார்.

சன்னி லியோனுக்கு கேரளாவில் மாபெரும் ரசிகக்கூட்டம் உள்ளது. அவர் முதல்முறை கேரளா வந்த போது பெரும் திரளான ரசிகர்கள் கூடி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களுக்கே இத்தனை கூட்டம் கூடியதில்லை. அதன் பிறகு சில மலையாளப் படங்களில் சன்னி லியோன் தலைக்காட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரோனா இரண்டாம் தலை தொடங்கிய நேரத்தில் சன்னி லியோன் ஷீரோ (Shero) படத்துக்காக கேரளா சென்றிருந்தார். இந்தப் படத்தில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். செம்பன் வினோத் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். ஸ்ரீஜித் விஜயன் படத்தை இயக்குகிறார். சைக்கலாஜிகல் த்ரில்லராக உருவாகும் இப்படம் தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகிறது.

Also read... 800 கோடியில் தயாராகும் இரண்டு படங்கள்...!

கேரளாவில் இருந்த போது படப்பிடிப்பு புகைப்படங்களையும், கேரளாவின் இயற்கை சார்ந்த புகைப்படங்களையும் சன்னி லியோன் வெளியிட்டு வந்தார். மும்பை திரும்பியபின் சாலையோரத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு தனது கணவருடன் இணைந்து உணவு வழங்கினார்.

இந்நிலையில், செம்பன் வினோத், சன்னி லியோனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 'நல்ல உள்ளம்' (A Good Soul) என்று குறிப்பிட்டுள்ளார்.  ஷீரோ படத்தைத் தொடர்ந்து மேலும் பல மலையாளப் படங்களில் நடிக்க சன்னி லியோனுக்கு வாய்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actress Sunny Leone