செக்கச் சிவந்த வானம்: விஜய் சேதுபதி நடித்த அதிரடி காட்சிகள் (வீடியோ)

news18
Updated: September 12, 2018, 8:14 PM IST
செக்கச் சிவந்த வானம்: விஜய் சேதுபதி நடித்த அதிரடி காட்சிகள் (வீடியோ)
செக்கச் சிவந்த வானம்
news18
Updated: September 12, 2018, 8:14 PM IST
செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி நடித்த காட்சிகளை படமாக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

`காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ரசூல் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்