முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்ஸ் ஆபிசில் கலக்கும் செக்கச் சிவந்த வானம்: அமெரிக்காவில் ரூ. 4 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிசில் கலக்கும் செக்கச் சிவந்த வானம்: அமெரிக்காவில் ரூ. 4 கோடி வசூல்

செக்க சிவந்த வானம் - பட போஸ்டர்

செக்க சிவந்த வானம் - பட போஸ்டர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வசூலை அள்ளி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு மணிரத்னம் எடுத்துள்ள இந்த படத்திற்கான, கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக அமைந்ததால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை இந்தப் படம் ரிலீசானது. வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 8.05 கோடி வசூல் செய்தது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ரூ.4 கோடி வசூல்: அமெரிக்காவில் செக்கச் சிவந்த வானம் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் காலாவிற்கு அடுத்த இடத்தை செக்கச் சிவந்த வானம் பிடித்துள்ளது.

இதேபோல், ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து மொழி படங்களின் வசூலை விட செக்கச் சிவந்த வானம் படத்தின் வசூல் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: America, Australia, Box office, Chekka Chivantha Vaanam, Collection