செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

news18
Updated: August 10, 2018, 8:03 PM IST
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செக்க சிவந்த வானம் - பட போஸ்டர்
news18
Updated: August 10, 2018, 8:03 PM IST
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் 28 - ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Loading...


விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி ஆகியோர் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்